பெருந்தொற்று என்னும் நாடகம் !

06 September 2021

#பெருந்தொற்று_என்னும்_நாடகம்

--ஏகப்பிரியன்----- 

உனது கருத்தில் எனக்கு உடன்ப்பாடில்லை.
ஆனால்,அதை கூறும் உன் உரிமையை
பாதுகாக்க என் உயிரையும் தருவேன்.

இது ஒரு மேற்கு நாட்டு அறிஞனின் வாக்கு
மட்டுமல்ல 'ஜனநாயகத்தின் தாரக மந்திரம்'.

அறிவியல் என்று கூறிக்கொண்டு நன்றாக 
இருப்பவர்களை பரிசோதனை செய்து  உனக்கு 
பெருந்தொற்று உள்ளது என்று கூறி பல 
வழிகளில் உயிர்களை கொடுங்கோன்மை
செய்யும் ஆட்சியாளர்களே.உங்கள் 
பார்மூலாக்களிலும் கிராபிக்ஸ் வரைப்படங்களிலும்
மட்டுமல்லாது உண்மையிலேயே எங்களுக்கு 
பெருந்தொற்று ஏற்பட்டு மாண்டு போகையில்
நிச்சயம் எங்களை காக்கும் கடமை அரசிற்கு
உள்ளது.ஆனால்,மருந்தே இல்லை என்று 
கூறப்படும் இந்த நோய்க்கு மருந்து ஒவ்வொரு
நாட்டிலும் உள்ள சுக்கு மல்லி வகையறாக்களும்
நல்ல உணவும்,பூரண ஓய்வும் மட்டுந்தான் 
என்று ஆன பின்னும் அனைவருக்கும் 
பரிசோதனை அனைவருக்கும் தடுப்பூசி என்று
மக்களை  ஏமாற்றி தடுப்பூசியை போட்டே 
நோயை அதிகப்படுத்தும் வேலையை ஏன்
செய்கிறாய்? 

பிறகு அய்யா SPB விசயத்தில் 
கூறியதைப்போல "நாங்கள் நன்றாக கவனித்துக்
கொண்டோம்.ஆனால்,ஒவ்வொரு செயற்கையான
சிகிட்சைக்கும் பக்கவிளைவுகள் உண்டு.
ஒரு பக்கம் நோயின் தாக்கம் மற்றொரு பக்கம்
தாங்க முடியாத அளவு பக்க விளைவு இவற்றினாலேயே
எங்களால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது."
என்று;ஏன் உண்மையை போட்டு உடைக்கிறாய்?
கறுப்பு பூஞ்சை முதல் அடுத்தடுத்து வரும் வீர்ய 
வஸ்த்து கொரோனா எல்லாம் ஆன்ட்டிபயாடிக்கின்
பக்க விளைவு என்று சுகாதார அமைச்சரே 
தெளிவாய் தெரிந்து கூறியுள்ள போது.
மக்கள் யாரும் பெருந்தொற்று பற்றி பேசினாலோ
கருத்துக்களை பகிர்ந்தாலோ அது குற்றம்,
உங்கள் தகவல்கள் கண்காணிக்கப்படுகிறது
என்று, ஏன் வீணான வதந்தி என்று நீ
நம்புகின்ற வெற்று வார்த்தைகளை கண்டு
பயந்து நடுங்குகிறாய்? கருத்தும் எழுத்தும்
மக்களின் பிறப்புரிமை அதை உங்களால் 
தடுக்கவே முடியாது. உண்மையாய் 
நான் கண்ட வியாதியை கீழே குறிப்பிட்டுள்ளேன்.
இதற்காக என்னை தண்டிக்கவோ, கண்டிக்கவோ 
முடியுமானால் அதை செய்யுங்கள்.அடிமையான
முட்டாளாக ஊசிப்போட்டு நாளெல்லாம் பயந்து
மிருகத்தைப்போல சாவதை விட உண்மையை 
உணர்ந்து அதற்காக  குரல் கொடுத்து ஒரு 
மனிதனாக வாழ்ந்து போகவே விரும்புகிறேன்.

"நாங்கள் காவலர்கள் பார்க்கும் வரை மாஸ்க் 
போடுவதில்லை.தெருத்தெருவாய் சளி,இருமலை 
தேடி அலையும் சுகாதார ஊழியர்களை வீட்டிற்குள்
 நுழைய விடுவதில்லை.கொரோனா அறிகுறி என்று 
இவர்கள் கூறும் பழைய வியாதிகள் எல்லாவற்றுக்கும் 
எங்களுக்கு நாட்டு மருத்துவம் தெரியும்.அந்த
 மருந்துகளை கொடுத்தே இதுவரை நாட்டில் 
முக்கால் வாசி கொரோனா நோயாளிகளை காப்பாற்றி 
உள்ளனர்.இதில் பல அலோபதி மருத்துவர்களும் அடக்கம்."

எந்த சிரமும் இல்லாமல் சுகமாக வாழும் போதே,
வீடுவீடாக பரிசோதனை என்று வந்தவர்களின்
முகத்திலடைத்து கதவை சாத்தினோம்.
ஆனாலும் எங்கள் பெண்கள் பிரசவத்திற்கு
மருத்துவமனை செல்லும் போதும் மாதாந்திர
மருந்துகளை வாங்க மருத்துவமனை சென்ற 
போதும் வலுக்கட்டாயமாக பரிசோதனை செய்து
அதில் சிலரை நோயாளியாக்கி பல இலட்சங்களை
பிடுங்கியும் இன்னும் சிலரின் குடும்ப உறுப்பினர்களின்
உயிரை பிடுங்கிக்கொண்டும் அனுப்பினார்கள்.

தடுப்பூசியை விற்கவே இத்தனை அட்டூழியமும் என்று
அறிந்ததால் பலரும் அதையும் குத்திக்கொண்டோம்.
அதில் சிலரை அறிந்தே கொன்றோம்.

எங்கள் சிறுவர்கள்  தெருவில் அச்சமின்றி ஓடியாடி
விளையாடி வருகிறார்கள்.எங்கள் பசங்க ஊர்ச்சுற்றி,
நண்பர்களோடு கதையடித்து, சொல்போனிலும் 
கதைத்து இப்பொழுதுதான் சுகமாக வாழ்ந்து 
வருகிறார்கள்.கோவில்,தேவாலயம்,பள்ளிவாசல்
எல்லாவற்றிலும் கூட்டம் கூட்டமாக மூச்சோடு
மூச்சுக்கலந்து மனது முட்ட உறவாடுகிறோம்.

எங்க ஊர் அரசு மருத்துவமனையில் பலரும்
ஊசிப்போட்ட சில மணி நேரத்தில் சாவதை
பல காலமாகவே பார்த்து வருகிறோம்.
அது தற்போது அதிகரித்திருப்பதை தெளிவாக
தெரிந்தும்  வைத்துள்ளோம்.தனியார் மருத்துவமனைகளில் 47 ஆயிரம் கட்டணம் அதைப்போட உறவினர் கையெழுத்து கட்டாயம் என்றும் கூறுகிறார்கள். பிறகு அந்த ஊசியால்தான் உயிரும் போனது என்கிறார்கள்.தனியாருக்கு வருமானம் வந்தது.உறவுகளுக்கு மட்டுமே உயிர் போன வேதனை தெரியும்.இந்த ஊசி எத்தனை பேருக்கு போடப்பட்டது,அதில் எத்தனை பேர் பிழைத்தார்கள்?என்பதை குடும்பத்தினருக்கே தெரிவிப்பதில்லை.போகட்டும் அரசிடமாவது அதுபற்றி தகவல்கள் உள்ளதா?
தடுப்பூசி போட்ட பின்னே சட்டென்று மடிந்தவரையும்
சில நாள் கழித்து மடிந்தவரையும் அடுத்த நாள்
நடைப்பயிற்சியிலேயே சுருண்டு விழுந்து 
செத்தவர்களையும் எங்கள் கண்ணால் 
பார்த்து விட்டோம். ஆனால்,கொரோனா இருந்தது
வீட்டில் சிகிட்சையில் இருக்கும் போது சுருண்டு
விழுந்து இறந்து விட்டார்.என்று ஒருவரையும்
கண்டதில்லை.எந்த ஒரு ஊசியும் மருந்தும் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளாது.என்பதே வைத்தியத்தின் பாலபாடம்.ஆனால்,யாருக்கும் பரிசோதனை செய்யாமல் எல்லோருக்கும் தடுப்பூசியை போடுவது, கொலைத்திட்டம் என்று கூறும் கருத்தை வலுப்படுத்துவதாய் உள்ளது.

எங்கள் பிள்ளைகளை குறிவைத்து பல மாதங்களுக்கு
முன்பே அரசு இயந்திரங்கள் கார்ட்டூன் வரைந்த 
படுக்கை அறைகளை மருத்துவமனைகளில் 
தயார்ப்படுத்தி விட்டதையும் நன்றாக உள்ள 
பிறந்த குழந்தைகளையும் அப்சர்வேசனில் வைக்க
வேண்டும் என்று பிடுங்கி வைத்துக்கொண்டு.
பிறகு பெருந்தொற்று கணக்கில் சேர்த்துக்கொன்றதையும்
கண்ணால் கண்ட முதல் சாட்சியாக உள்ளோம்.

இப்பொழுது கல்லூரியை திறக்கிறார்களாம்,பள்ளியை
திறக்கிறார்களாம் தடுப்பூசியும் கொரோனா டெஸ்ட்டும்
கட்டாயமாம்.உண்மை தெரிந்த பின் கூறப்படும்
அத்தனை பொய்களும் சுவரசியமானதுதான்.
ஆனால்,அந்த சுவரசியத்தை காணாது மடியப்போவது
எங்கள் பிள்ளைகள் அல்லவா, அதை நினைத்தால்
மட்டும் தான் நெஞ்சம் வேகிறது.

கொரோனா என்று ஆரம்பித்த உடனே இது தடுப்பூசியை
விற்க உலக மருத்துக்கழகம் போட்ட திட்டம் என்றும் 
பல உயிரை அழித்து புதிய உலகைப்படைக்க 
வல்லரசுகள் போட்ட சட்டம் என்றும்  தெளிவாக 
கூறிய தமிழினம் இன்று கரடியே காறித்துப்பிவிட்டது
எனும் படி அமெரிக்கா,இங்கிலாத்து,ஜெர்மன்,இத்தாலி
என்று உலகமே கொரோனா பெயரில் நடக்கும்
மோசடி நாடகங்களுக்கு எதிராக வீர்யமாக வீதியில்
இறங்கி போராடும் போது.மறத்தமிழன் மட்டும் 
தன் அரசு வேலை,தன் வசதி,தன்னலம் என்று சுருண்டு
இன்னும் நாடகத்தை நம்புவதைப்போலவே 
நடித்து வருகிறான்.#நாசமா_போகட்டும்.

சத்தியமா எங்க ஊர்ல கொரோனா இல்லை.
கொரோனா என்ற பெயரில் நானோ எனது
ஊரில்  சிலரோ இறந்தால் அது
இந்த அரசின் ஆட்க்குறைப்பு நடவடிக்கைதான் 
என்பதை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.அது போதும்!

வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
நலம் பெருகட்டும் …