12 மணி நேரத்தில் குணமடையலாம்... கொரோனாவுக்கு புது ட்ரீட்மெண்ட் !

10 June 2021

கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையால் 12 மணி நேரத்தில் 2 கொரோனா நோயாளிகள் குணமடைந்ததாக தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
இந்நிலையில், டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் 36 வயதான சுகாதார ஊழியர் மற்றும் 80 வயது முதியவருக்கு மருத்துவர்கள் மோனோகுளோனல் ஆண்ட்டி பாடி தெரபி எனும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டு இவர்களை 12 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணப்படுத்தியுள்ளனர். 
 
இந்த சிகிச்சை முறை முன்னதாக எபோலோ, ஹெச்ஐவி போன்ற நோய்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையாகும். இந்த சிகிச்சையை முறையாக சரிவர பயன்படுத்தினால் கொரோனாவில் இருந்து பலரை எளிதில் காப்பற்ற முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.