பெகாசஸ் விவகாரம்: போராட்டம் அறிவித்தது காங்கிரஸ்!!

20 July 2021


இந்தியாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களின் சமூக வலைதள கணக்குகளை வேவு பார்த்ததாக பெகாசஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய அரசு இதற்கு சரியான தீர்வு காண நேற்றைய தினம் இரு அவைகளிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இரண்டாவது நாளாக இன்று கூட இருக்கும் அவைகளிலும் இது தொடர்பான விவாதங்களை எழுப்ப காங்கிரஸ்,ஆம் ஆத்மி, திருணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். 


ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. வெளியான பெயர் பட்டியலில் எந்த முகாந்திரமும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. 

உரிய பதில் அளிக்க வேண்டி நாளை மறுநாள் நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் எம்.பி ராகுல் காந்தி அறிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் தொடர்பான உண்மையை மக்களுக்கு எடுத்துரைப்பது அரசின் கடமை என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது.