இஸ்லாமிய பெண்களையும் ஷரியத் சட்டம் பற்றியும் துவேஷமான கருத்துக்களை பரப்பும் H. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை கமிஷனரிடம் புகார் மனு

28 October 2020

இஸ்லாமிய பெண்களையும் ஷரியத் சட்டம் பற்றியும் துவேஷமான கருத்துக்களை பரப்பி வரும் பி.ஜே.பி .கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் H. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆல் இந்திய இமாம்ஸ் கவுன்சில் மதுரை காவல்துறை கமிஷனரிடம் புகார் அளித்தனர்.


தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அமைதிக்கு பங்கம் விளைவித்து அதன் மூலம் பி ஜே பி.கட்சியை வளர்க்க திட்டம் தீட்டி ஹிந்துத்துவ அரசியலுக்கு எந்த ஒரு அரசியல் நிகழ்வு எற்ப்பட்டாலும் கலவரம் ஏற்படுத்த முயலும் ஹிந்துத்துவவாதிகளை விமர்சித்தாலும் சிறிது கூட தொடர்பு இல்லாத இஸ்லாமிய கொள்கை மற்றும் முஸ்லீம் பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசி வரும் H. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை போலீஸ் கமிஷனர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கப்படும்.

பேட்டி
முகம்மது அப்துல்லன்
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்