சுற்றுச்சூழல் மேம்பாடு: பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்த முதலமைச்சர் அறிவுரை

22 July 2021


சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இளைய தலைமுறையினரை அதிகளவு ஈடுபடுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

இதில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பசுமையை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

மரம் நடுதல் திட்டத்தைத் தீவிரப்படுத்தித் தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்திய முதலமைச்சர், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினரைச் அதிக அளவு ஈடுபடுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.