சென்னையில் கொரோனா வழிமுறையை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து எவ்வளவுஅபராதம் வசூல் ?!

22 July 2021


சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத, வணிக நிறுவனங்களை கண்காணிக்க, காவல் துறையினருடன் இணைந்து, சிறப்பு அமலாக்க குழு ஏற்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குழுவின் சார்பில் 15 மண்டலங்களில் மேற்கொண்ட ஆய்வில், அரசின் வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் 73 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயும், அம்பத்தூரில் 9 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.