கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளை திறக்க வழக்கு

17 October 2020

கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளைத் திறக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் பதிலளிக்க (சிஎம்டிஏ) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டது. இங்கிருந்த கடைகள் திருமழிசை, மாதவரம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கடைகளாக அமைத்துக் கொடுக்கப்பட்டன.

வணிகா் சங்கங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, முதல் கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பா் 18-ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பா் 28-ஆம் தேதியும் திறப்பது எனவும் பின்னா் மற்ற கடைகளைத் திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.