பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரொனா பாதிப்பு!

16 May 2021

தமிழ், தெலுங்கைப் போல மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதற்கான படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள், செட் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட 17 நபர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது.

அதில் ஒரு ஒளிப்பதிவாளர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  மற்றவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இருந்தபோதிலும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.