அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5

01 September 2021

தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால், அது ‘பிக்பாஸ்’தான். தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 'பிக்பாஸ் சீசன் 4' கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பானது. இந்த நிலையில், தற்போது 5 வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக்கவுள்ளதாகவும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கு இன்று மாலை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா, ‘குக் வித் கோமாளி’ கனி, சுனிதா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தனியார் தொலைக்காட்சியும் மியூட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளது.