அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள் பற்றி விழிப்புணர்வு முகாம்

08 April 2021

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சார்பாக புலிவலம் கிராமத்தில் அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மருத்துவ அலுவலர் என் ஈஸ்வரி சுகாதார ஆய்வாளர். கே சம்பத் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பேசுகையில் வானொலி தொலைக்காட்சி செய்தித்தாள் மூலமாக உள்ளூர் வானிலையை தெரிந்து கொள்ள வேண்டும் தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் மற்றும் ஓ ஆர் எஸ் வீட்டிலேயே தயாரித்து அருந்த வேண்டும் நீர்மோர் லஸ்ஸி புளித்த சோற்றுநீர் எலுமிச்சை சாறு போன்ற பானங்களை பருகி நீர் இழப்பை தவிர்க்க வேண்டும் ஓ ஆர் எஸ் பவுடர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையம் குழந்தைகள் ஊட்டச்சத்து மையம் போன்ற இடங்களில் கிடைக்கும் மேலும் இக்கரைசலை வீட்டிலேயே ஒரு லிட்டர் தண்ணீரில் 3 ஸ்பூன் சக்கரை ஒரு ஸ்பூன் உப்பு கலந்து பருகவேண்டும்.குழந்தைகளுக்கான குறிப்புகள் நிறுத்தப்பட்ட கார்களில் குழந்தைகளை விட்டு செல்ல வேண்டாம் இளநீர் தர்பூசணி பண நுங்கு போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும் மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீர் இழப்பை குறிக்கும் முதியவர்களுக்கு ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் குளிர்ந்த நீரில் குளிக்கவும் போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணியவும் கை விசிறிகளை இளைப்பாற உபயோகிக்கவும் கண்ணாடி மற்றும் காலணி அணிந்து கோடையில் பாதுகாப்புடன் செல்லவும் என அறிவுறுத்தப்பட்டது மேலும் ஓ ஆர் எஸ் கரைசல் வழங்கப்பட்டது.