சாலையில் கிடந்த 9 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தினை காவல் நிலையத்தில் ஓப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

01 December 2022

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிபட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் த/பெ சுப்பிரமணியன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் வடதொரசலூர் என்னுமிடத்தில் தனது ஆட்டோவில் காய்கறிகள் ஏற்றி வந்தபோது சாலையில் கீழே கிடந்த பர்சை எடுத்து பார்த்ததில் 9,500/- ரூபாய் பணம் இருந்தது தெரிந்து ஆட்டோ ஓட்டுநர் அருகில் இருந்த தியாகதுருகம் காவல் நிலையம் வந்து ஒப்படைத்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வட்டம், சாத்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த தமிஸ்தீன்(29) த/பெ சபியுல்லா என்பவர் தியாகதுருகம் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின் பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை தொலைத்துவிட்டதாக தியாகதுருகம் காவல் நிலையம் வந்து புகார் கொடுத்தார் அவரை விசாரணை செய்ததில் அவர் கூறியபடி பணம் ஆட்டோ ஓட்டுநர் ஓப்படைத்த பர்சில் இருந்தது எனவே பணத்தினை காவல் துறையினர் அவரிடம் ஓப்படைத்தனர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் முருகனுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது