பொது முடக்கம் அமலில் உள்ளவரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ₹5000 நிவாரணம் வழங்கக்கோரி இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

11 June 2021


கொரோனா தொற்று ஊரடங்கால் ஆட்டோ தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களாக ஆட்டோ தொழில் செயல்படாத நிலையில் ஊரடங்கினால் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகி யுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் காக்க தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும்.எனவும் பொதுமுடக்கம் உள்ளவரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணமாக மாதம்தோறும் 5000 ரூபாய் வழங்க வேண்டும்.மேலும் வாகனங்களின் இன்சூரன்ஸ்,வரி,எப்.சி கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாகனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ள மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு ஊரடங்கு முடியும் வரை விதிவிலக்கு அளிக்க வேண்டும்.நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் செய்யாதவர்கள் என அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் அரசு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தை பாதுகாக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.