ஆன்லைன் வகுப்பில் தொடரும் பாலியல் தொல்லை: அதிகாரிகள் ஆலோசனை

12 June 2021

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் தொடர்ந்து  மாணவிகளுக்கு பாலியல் ரீதியான  தொந்தரவுகள் சமீபகாலங்களில் பெருகி வருகிறது. 


இதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருவாரூரில்
பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வித இடர்பாடுகளையும் ஏற்படுத்தாத வகையில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளி தாளாளர்கள்,
முதல்வர்கள்,தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை WEBEX MEET இணையவழி மூலம் தொடர்புகொண்டு அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் வழங்கினார்கள்.இதில் மொத்தம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகள் கலந்துகொண்டன. 

கி.இரவி
திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.