திருச்சியில் உள்ள அப்போலோ மருத்துவமனை சாதனை

20 February 2021

திருச்சியில் உள்ள அப்போலோ மருத்துவமனை சாதனை

திருச்சிஅப்போலோ மருத்துவமனையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அழகப்பன் பேசியதாவது;-சிறுநீரக புற்றுநோய் என்பது ஒரு மிகப்பெரிய கொடிய நோயாக இருக்கிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சுமார் 3 சதவீதத்திற்கும் குறைவான வர்களுக்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி உடல் முழுவதும் பரவி விடுகிறது. மேலும் இந்த சிறுநீரக கட்டிகளை அகற்றுவதற்கு இந்தியாவிலேயே குறைந்த இடங்களில் தான் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.அந்த வகையில் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு சுமார் 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிறுநீரகத்தில் கட்டியிருப்பதாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு மூன்றாம் நிலையான சிறுநீரகக் கட்டி கண்டறியப்பட்டது. இந்த மூன்றாவது நிலையான சிறுநீரகக் கட்டியை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. மேலும் சிறுநீரகத்தில் மூன்றாவது நிலையில் இருந்தால் அது எளிதில் இருதய அறைக்குள் சென்று விடும் ஆகவே அவ்வாறு சென்று விட்டால் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும்.ஆகவே அதற்குள்ளாக அதனை சிகிச்சைக்கு உட்படுத்தி வெளியே எடுத்துவிட வேண்டும்.இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு தயார் படுத்தினோம். பின்னர் இதனை எவ்வாறு வெளியே எடுக்க வேண்டும் என்று எங்கள் மருத்துவ குழுவினருடன் சேர்ந்து ஆலோசனை நடத்தினோம். மேலும் மைக்ரோ டாக்டர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், அறுவை சிகிச்சை அறையில் பணிபுரியும் டாக்டர்கள் உட்பட அனைவரும் கலந்தாய்வு செய்து முடிவு எடுத்தோம்.மேலும் எங்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிதியான பெண்ணிடம் நாங்கள் உங்களை குணப்படுத்துகிறோம் மேலும் நோயின் தன்மையை விளக்கி கூறினோம். இதையடுத்து அவரும் தன்மையை புரிந்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதையடுத்து சாதாரணமாக அறுவைசிகிச்சை செய்கின்ற பொழுது 7 லிட்டர் ரத்தம் இழப்பு ஏற்படும்  ஆனால் இந்த அறுவை சிகிச்சையில் அதற்கும் குறைவாகத்தான் ஏற்பட்டது. மேலும் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்கின்ற பொழுது தொழில்நுட்பம் நிறைந்த சி.சி.டி.வி. கேமரா ஒன்றை உடலின் உள்ளே வாய்  வழியாக செலுத்தி சிறுநீரகத்தில் இருக்கின்ற கட்டியானது  எந்த பகுதியில் இருக்கிறது என்று அறிந்து தெளிவாக அகற்றினோம். அறுவை சிகிச்சை முடிந்த 3 மணி நேரத்தில் அந்த 54 வயது பெண் முகமலர்ச்சியுடன் காட்சி அளித்தார். பின்னர் அவரின் உறவினர்கள் எங்களிடம் கூறுகையில் 2 குழந்தைகளின் தாயை காப்பாற்றி கொடுத்துவிட்டீர்கள் அதனால் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறினார்கள்.மேலும் 90 சதவீத சிறுநீரக கட்டிகள் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தான் கண்டறியப்படுகிறது.முன்பெல்லாம் சிறுநீரகக் கட்டி ஏற்பட்டால் சிறுநீரகம் முழுவதையும் அகற்ற வேண்டும். ஆனால் தற்போது தொழில்நுட்பம் விரிவடைந்து விட்டதால் அந்த நிலை இல்லை. மேலும் இந்த சாதனையை திருச்சியில் உள்ள அப்போலோ மருத்துவமனை செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என்று தெரிவித்தார். 

கொற்றவை செய்திகளுக்காக திருச்சி செய்தியாளர் ஹரிஹரன்