மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாதிப்புகள் தொடர்பான இணையவழி கருத்தரங்கம்

12 January 2022

சென்னை சிஏஜி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் சுமண்ணா வரவேற்றார்.. கருத்தரங்கில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள், உடல்நல பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது..

பெரும்பாலான பிளாஸ்டிக் வாளிகள், குடங்கள், குவளைகள், மெல்லிய பிளாஸ்டிக் கொள்கலன்கள், கேரிபேக்குகள் பயன் படுத்துவதில் பல்வேறு சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது..


பிளாஸ்டிக் மாசுபாடு என்பது ஒரு தீராத பிரச்சனை, இதை சமாளிக்க மக்கள் முன்வரவேண்டும்..
.மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்களில் என்னென்ன ரசாயனங்கள் உள்ளன என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் மீண்டும் பயண்படுத்தப்படுவது தவிர்க்க வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தப்பட்டது. சிஏஜி வம்சி கருத்துரை வழங்கினர்.சிஏஜி சரோஜா மற்றும் பல்வேறு நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள், நுகர்வோர் உரிமைகள் இயக்கம் நிறுவனர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.சிஏஜி சுமன்னா நன்றி கூறினார்