அழகர்கோவில் ஆடித் திருவிழாவையொட்டி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த கள்ளழகர்....

23 July 2021


மதுரை மாவட்டம் மேலூர் அருகே 108 வைணவ தலங்களில் ஒன்றாக கருதக்கூடிய அழகர்கோவில் ஸ்ரீகள்ளழகர் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகின்றது, 

இதனையொட்டி கள்ளழகர் தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகின்றது, 

இந்நிலையில் விழாவின் எட்டாம் நாளான இன்று கள்ளழகர் தங்கப்பல்லக்கில் காலையில் எழுந்தருளிய நிலையில், மாலையில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நாளை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், மாலையில் நடைபெறும் அழகர்கோவில் காவல்தெய்வமான 18ம்படி கருப்பணச்சாமி சந்தண காப்பு செலுத்தும் நிகழ்ச்சி சமூக வலைத்தளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்ய திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .