மீண்டும் களமிறங்கும் "டிக்டோக்" செயலி!!

21 July 2021


இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி, மீண்டும் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


டிக்டாக் செயலி, இந்தியாவில் அதிகளவு பயனர்களை கொண்டிருந்தது. ஏராளமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர். இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், 2020-ஆம் இந்தியா – சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவத்தின் பதிலடியில் ஏராளமான சீன ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

எல்லையில் பதற்றம் தொற்றிக் கொண்ட நிலையில், மத்திய அரசு, சீனாவின் டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது. கடந்த வருடம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டபின், பேட்டில்கிரவுண்ட் என்ற வேறு பெயருக்கு மாறி இந்தியாவுக்கு வந்ததை போல, டிக் டாக் நிறுவனமும் இப்போது பெயர் மாற்றத்தோடு மீண்டும் இந்தியாவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

டிக் டாக் செயலியின் டெவலப்பரான பைட் டான்ஸ் (byte Dance) நிறுவனம், மத்திய தொழிற்துறை அமைச்சகத்திடம் இதற்காக விண்ணப்பித்துள்ளது. அதில் இதன் காப்புரிமை, வர்த்தக முத்திரையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில் டிக்டாக் (tic-Tok) கின் பெயர் டிக் டோக் (Tik-Tock) என்று இடம்பெற்றுள்ளது. இந்த சின்ன மாற்றத் தோடு இந்த செயலி மீண்டும் களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.