அடங்காத கணவனையும் அடக்கும் வசிய மூலிகை

20 December 2021

அடங்காத கணவனையும் அடக்கும் வசிய மந்திரம்!ஒரு பெண் எப்பேர்பட்டவளாக இருந்தாலும், ஆணை அடக்கி ஆள வேண்டும் என்று தான் நினைப்பாள்.இது அவளது பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி. ஆனால், அதுவே நடக்காத பட்சத்தில் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். இது நாளடைவில் விவாகரத்து வரைக்கும் சென்றுவிடும். அப்படியெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும், தங்களது கணவன்மார்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இந்த மந்திரம் பயனுள்ளதாக இருக்கும்.சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சீதேவி செங்கழுநீர் மூலிகையின் அருகில் சென்று அதனை சுற்றியும் சுத்தம் செய்து அதனை சுற்றியும் ஒரு குழி பறித்து நீர் ஊற்றி ஒரு வாழை இலையை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வாழை இலையில், வெற்றிலை, பாக்கு, அவல், வாழைப்பழம், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை வைத்து மஞ்சள் தூள் கொண்டு பிள்ளையார் பிடித்து அவருக்கு அருகம்புல், மலர் சூடி, சாம்பிராணி தூபம், கற்பூர தீபம் காண்பித்து விநாயகர் மற்றும் மகாலட்சுமி தேவியை வழிபட வேண்டும்.அதன் பிறகு, விநாயகப் பெருமான் மற்றும் மகாலட்சுமி தேவியை நினைத்து, ஒரு மஞ்சள் நூல் நடுவில் விரலி மஞ்சளை வைத்து முடிச்சிட்டு மூலிகையில் தாலி கட்டுவது போன்று 3 முடிச்சு போட்டு கட்டி விட வேண்டும்.
இதையடுத்து,ஓம் மூவர் இட்ட சாபம்,முனிவர் இட்ட சாபம்,அனைவர் இட்ட சாபம்அகண்டு போக சிவஎன்று 51 முறை மந்திரம் சொல்லி, நீரில் சிறிதளவு மஞ்சள் கரைத்து அந்த மூலிகை மேல் தெளிக்க மூலிகை சாபம் நீங்கும். பின்பு,ஓம் மூலி மகா மூலிஉயிர் மூலிஉன் உயிர் உன் உடலில் நிற்க ஸ்வாஹாஎன்று 51 முறை மந்திரம் சொல்லி சிறிதளவு அருகம்புல் மற்றும் விபூதி எடுத்து மூலிகை மேல் போட மூலிகைக்கு உயிர் வரும். அதன் பிறகு அந்த சீதேவி செங்கழுநீர் மூலிகையை ஆணி வேருடன் சேர்த்து எடுத்து வந்து வேரும் சிறிதளவு ஒரிஜினல் கொரோசனையும், சிறிதளவு தேனும் விட்டு அரைத்து வைத்துக் கொண்டு மனைவியானவள் தனது நெற்றியில் பொட்டு போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் மூலம் எப்படிப்பட்ட முரட்டுத்தனமான குணம் கொண்ட ஒரு ஆணாக இருந்தாலும், அவன் மனைவியின் சொல்லுக்கும், பேச்சுக்கும் அடங்கி கட்டுப்பட்டு தான் இருப்பான். மேலும், மனைவி சொல்லே மந்திரம் என்பதற்கேற்ப நடந்து கொள்வான்.