கே.ஜி.எஃப் ஹீரோ 3000 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி!

02 June 2021

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.


இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்று 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்களில் கொரொனாவைத் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.


இந்நிலையில் சினிமா பிரபலங்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தடுப்பூசி செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.

எனவே, கொரொனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா கலைஞர்கள் சுமார் 3000 கலைஞர்களுக்கு ரூ.5000 பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளா கே.ஜி.எஃப் பட ஹீரோ யாஷ்.

மேலும்,சினிமாவில் உள்ள 21 துரைகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்தப் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் அவர் செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.