நீண்ட தூரம் நடந்துசென்று ஓட்டு போட்ட நடிகர் விக்ரம்

07 April 2021

நடிகர் விக்ரம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை ஓட்டு போட கிளம்பினார். காரை தவிர்த்து விட்டு ஒன்றே கால் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேளச்சேரிக்கு உட்பட்ட தியோசப்பிக்கல் பள்ளி வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்றார். விக்ரம் நடந்து போவதை பார்த்த ரசிகர்களும் அவரை பின்தொடர்ந்து சென்றனர். வீட்டுக்குள் இருந்தவர்களும் சாலையில் சென்றவர்களும் விக்ரம் நடந்துபோவதை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். வாக்குசாவடியை அடைந்து விக்ரம் ஓட்டு போட முயன்றபோது வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் சிறிதுநேரம் காத்திருந்து ஓட்டு போட்டுவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.