உயர் பதவி நியமனத்தில் தீண்டாமை கடைபிடிப்பதை கைவிட வேண்டும்! தேவேந்திரகுல மற்றும் அருந்ததிய சமூகத்திலிருந்து உடனே ஆயர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை !

21 November 2020

கத்தோலிக்க திருச்சபையில் காலியாக உள்ள 6 மறைமாவட்ட  பணியிடங்களில் புறக்கணிக்கப்பட்டு வரும் தேவேந்திரகுல மற்றும் அருந்ததிய சமூகத்திலிருந்து உடனே ஆயர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை

தமிழக கத்தோலிக்க சமத்துவ இயக்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாநில தலைவர் ஆரோ ஸ்டீபன் ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் செய்தியாளரை சந்தித்தபோது அவர் கூறியதாவது தமிழக கத்தோலிக்க திருச்சபையில் ஆயர்கள் நியமனத்தில் மறைமாவட்ட உயர் பதவி நியமனத்தில் தீண்டாமை கடைபிடிப்பதை கைவிட வேண்டும், கத்தோலிக்க திருச்சபையில் காலியாக உள்ள 6 மறைமாவட்ட ஆகிய பணியிடங்களில் இதுவரை புறக்கணிக்கப்பட்டு வரும் தேவேந்திரகுல மற்றும் அருந்ததிய சமூகத்திலிருந்து உடனே ஆயர்களை நியமிக்க வேண்டும் எனவும். இனிவரும் காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் தமிழக கத்தோலிக்க திருச்சபையில் ஆயர்கள் நியமிக்கப்பட வேண்டும்  தமிழகத்தில் 3 பேராயர்கள் உள்ளனர்.

இதில் குறைந்த ஒரு தலித் பேராயராவது நியமிக்கப்பட வேண்டும் . கிறிஸ்தவ நிறுவனங்கள் கிறிஸ்தவ ஏழை மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் மதுரை மறைமாவட்டம் சிவகங்கை தஞ்சை பாளையங்கோட்டை தூத்துக்குடி திருச்சி கும்பகோணம் மறைமாவட்டம் ஆகிய 7 மறைமாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.