சாத்தூர் அரசு மருத்துவமனையில் மாதிரி தீ விபத்து தடுப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது

03 April 2021


சாத்தூர் தீயணைப்புத்துறை வீரர்கள் அரசு மருத்துவமனை 
 செவிலியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதிரி தீ விபத்து தடுப்பு பயிற்சி  நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் கணேசன் உத்தரவின்பேரில் சாத்தூர் தீயணைப்பு துறை அலுவலர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி   வீரர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அங்கு உள்ள செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தீ விபத்து காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்தின் போது தீயை அணைக்கும் முறை தீ விபத்தினை தடுக்கும் முறை மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த செயல் விளக்கப் பயிற்சி செய்து காண்பித்தனர். தீ தடுப்பு பயிற்சி விளக்க நிகழ்ச்சியில் சாத்தூர் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு  செயல் விளக்கம் பெற்று பயனடைந்தனர்.

சாத்தூர் .
க.அருண் பாண்டியன்