பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர் நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

11 September 2021

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக இதுவரை எவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது, பாதிப்புகளின் நிலவரம் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர் நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

 

 

 

 

இரண்டாவது அலை முழுமையாக ஓயவில்லை என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. செப்டம்பர், அக்டோபரில் கொரனோ மூன்றாவது அலை தாக்கும் என அச்சம் கொள்ளப்பட்ட நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷண் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.