936 பயனாளிகளுக்கு ரூ. 4.75கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டா மாவட்ட ஆட்சியர் வழங்கினார்...

01 December 2022

936 பயனாளிகளுக்கு ரூ. 4.75கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டா மாவட்ட ஆட்சியர் வழங்கினார்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் 
ஷ்ரவன் குமார் தலைமையில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது,  

மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றிடவும், பொது மக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளும் முழுவதும் சென்றடைவதற்கு அனைத்து துறையின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டத்திற்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் நில எடுப்பு செய்யப்பட்டு ஏற்கனவே நில ஒப்படைவு வழங்கப்பட்ட நிலையில், தற்பொழுது குடியிருப்பு மற்றும் அனுபவத்தில் உள்ள தானம், எறையூர், குஞ்சரம், அங்கனூர், செம்பியன்மாதேவி, பரமேஸ்வரிமங்கலம், பரிந்தல், திருப்பெயர், பாலி, ஒலையனூர், வேலூர், நத்தாமூர், தாமல், சிறுத்தனூர், மாவட்டத்தில், கூவாகம், மடப்பட்டு, ஆண்டிக்குழி, மதியனூர், மற்றும் மட்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள 936 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 936 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது,

மேலும் கிராமங்கள் தோறும் ஆய்வு மேற்கொண்டு வீட்டுமனை பட்டாக்கள் இல்லாத மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கிடவும், வீடுகள் அற்ற பொது மக்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணையினை வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பொதுமக்கள் அனைவரும் தற்போது வழங்கப்பட்டுள்ள வீட்டுமனை பட்டாக்களை பாதுகாப்பாகவும், மனைகளை மற்ற நபர்களுக்கு விற்பனை செய்யாமலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது பொது சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வருவாய்த்துறை சான்றுகளும் சுலபமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம், மேலும் ஊரக வளர்ச்சித் துறை, சமூக பாதுகாப்புத்துறை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது, தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது இதனையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோக ஜோதி, உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் கு.மணிமேகலை தனி வருவாய் வட்டாட்சியர் மணிகண்டன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பாண்டியன், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்...


கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் 
மாவட்ட செய்தியாளர்/ சப் எடிட்டர்