ஓமனில் புதிதாக 800 பேருக்குகொரோன தொற்று

02 April 2021

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 673 பேர் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90.3 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,681 ஆக இருந்து வருகிறது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 160 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..