ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்த நாளை ஒட்டி 2020 பனை மர விதைகள் நடும் விழா

16 October 2020

 
முன்னாள் குடியரசு தலைவரும் , இந்திய விஞ்ஞானியுமாகிய டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு செய்யாறு கல்வி மாவட்டத்தின் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாக ஏனாதவாடி கிராம சுற்றுவட்டார பகுதிகளில் 2020 பனை மர விதைகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர்  பி.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விதைகளை நடவு செய்தனர், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் செல்வத்திருமால் வரவேற்புரை ஆற்றினார்,  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகானந்தம், திருவத்திபுரம் பள்ளி தலைமையாசிரியர் தரணிகுமார் , ஜே ஆர் சி இணை செயலாளர்கள் திருவாசகம் , கோவேந்தன், சக்தி நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் ராகவேந்திரன், ஏனாதவாடி இளைஞர் இயக்கத்தின் சார்பாக விநாயகம், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மழை வளத்தை பெருக்கும் வகையிலும் 2020 பனைமர விதைகளை நடவு செய்தனர்.