இன்ஸ்டாகிராமில் இணைந்த மூன்று வருடங்களிலேயே 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்

03 September 2021

இன்ஸ்டாகிராமில் இணைந்த மூன்று வருடங்களிலேயே 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்ற தென்னிந்திய நடிகர் என்ற சாதனையை படைத்திருக்கிறார், நடிகர் விஜய் தேவாரகொண்டா.

 ’அர்ஜுன் ரெட்டி’ மூலம் கவனம் ஈர்த்து தென்னிந்தியா முழுக்க ரசிகர்களைக் கொண்ட, குறிப்பாக பெண் ரசிகர்களை அதிகளவில் கொண்டுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இணைந்து மூன்றரை வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள், 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்றிருக்கிறார். தென்னிந்தியாவிலேயே அதிக ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட நடிகர்களில் நடிகர் அல்லு அர்ஜுன்தான் முதலிடத்தில் இருக்கிறார். அவரும் 13 மில்லியன் ஃபாலோயர்களை சமீபத்தில்தான் பெற்றிருந்தார்.


 அவருக்கு அடுத்தப்படியாக விஜய் தேவரகொண்டா இருந்தார். ஆனால், அல்லு அர்ஜுன் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்ஸ்டாவில் இருந்து வருகிறார். அவருக்குப் பின்னர் இன்ஸ்டாவில் இணைந்து தற்போது, குறைந்த நாட்களிலேயே 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று அல்லு அர்ஜுனுடன் சமமான ஃபாலோயர்ஸ்களைப் பெற்றிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.