10 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

26 August 2022

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது NGO காலனியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 10 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி