நடிகர் தனுஷூக்கு ட்விட்டரில் 1 கோடி ஃபாலோயர்ஸ் -

18 July 2021ட்விட்டரில் ஒரு கோடி ஃபாலோவர்களைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்.


2 முறை தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ், தமிழில் முன்னணி நடிகராக உள்ளார். ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்கள் மூலம் இந்தி திரையுலகிலும் தடம் பதித்த தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அட்ரங்கி ரே என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


தேசிய அளவில் அறியப்படும் நடிகராக உள்ள தனுஷ். விரைவில் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். ரூஸோ பிரதர்ஸ் இயக்கி வரும் கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இதனால், உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இந்நிலையில், தனுஷின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ட்விட்டரில் அதிகமானவர்களால் பின்பற்றப்படும் தமிழ் நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்.