இரண்டாம் உலகப்போர்(1939-1945)

1918 ஆம் ஆண்டு முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது.1919 ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி மாநாடு நடைப்பெற்றது .வெர்சேல்ஸ் உடன்படிக்கை உள்ளிட்ட பல உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. இம்மாநாட்டிற்கு வெற்றி பெற்ற நாடுகள் கூட்டியா கூட்டமாகவே இம்மாநாடு நடந்து. தோல்வியடைந்த நாடுகள் மிக மோசமாக நடத்தப்பட்டன. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் முயற்சியால் உலக நாடுகளிடையே எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் பொருட்டு பன்னாட்டுகழம் ஏற்ப்படுத்தப்பட்டது.ஆனால் அது அதனை தவறியது. இதனால், ஜெர்மனி,இத்தாலி,ஜப்பான்,போன்ற அநாடுகளில் சர்வதிகார அரசு தோன்றின. ரோம்,பெர்லின் ,டோக்கியோ அச்சு உருவாகி இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்து.

{இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள்}

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது. பாரிஸ் அமைதி மாநாட்க்கு அது அழைக்கப்படவில்லை. கடுமையான மற்றும் அவமானகரமான உடன்படிக்கையில் கையெழுத்திடும்படி அது வற்புறுத்தப்பட்டது .
ஜெர்மனிய நிலப்பகுதிகள் அதனிடம்ருந்து பறிக்கப்பட்டது. அதன் குடியேற்றங்கள்களும் பறிமுதல் செய்ப்பட்டன.கடற்படை முற்றிலும் கலைக்கப்பட்டது ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த வெய்மார் குடியரசு போருக்குப்பின் தோன்றிய பிரச்சனைகள் எதையும் சாமளிக்க முடியவில்லை. ஜெர்மனிக்கு நேர்ந்த அவமானத்தை துடைத்தெறிய அதன் மக்கள் துடித்தனர். எனவே , இரண்டாம் உலகப்போரை பழிவாங்குவதற்க்கான போர் என்று கூறலாம்.

(சர்வாதிகாரத்தான் எழுச்சி)

இரு உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜரோப்பாவில் சர்வதிகார அரசுகள் தோன்றின .இக்காலத்தை சர்வாதிகாரிகளின் காலம் என்று அழைத்தனர் ஜெர்மனி இத்தாலி ஸ்பெயின் ஆசியாவில் ஜப்பான் ஆகிய நாடுகளில் சர்வதிகாரம் வேரூன்றியது . ஜெர்மனியில் வெய்மார் குடியரசு பலவீனமாகவே காணப்பட்டது . இதனை தலைவரான ஹிட்லர் அரசங்கத்தை தனது கட்டுபாட்டில் கொண்டுவந்தார் ஆக்கிரமிப்பு கொள்கை பின்பற்றிய அவர் ஆஸ்த்திரியா மற்றும் செக்கோஸ்லோவேகியா நாடுகளை கைப்பற்றினார் பின்னர் அவர் போலந்தை தாக்கியபோது இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.
இத்தாலியிலும் கிட்டதட்ட இதே நிலமை காணப்பட்டது . பாரிஸ் அமைதிமாநாட்டில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக இத்தாலி கருதியது . முசோலினி தனது பாசிக கட்சியை அங்கு தொடங்கி 1922ல் ஆட்சியைக் கைப்பற்றி தனது சர்வாதிகார ஆட்சியை நிறுவினார் . அவரும் ஆக்கிரமிப்பான அயலுறவுக் கொள்கையே பின்பற்றினார் . ஸ்பெயின் மற்றும் ஜப்பானிலும் சர்வதிகார உணர்வு தலையெடுத்தது. ஸ்பெயினில் தளபதி பிராங்கோ அங்கிருந்த குடியரசு ஆட்சியை கவிழ்த்துவிட்டு தனது சர்வதிகார ஆட்சியை
நிறுவினார் . இதற்கு ஹிட்லர் மற்றும் முசோலினியின் படைகள் அவருக்கு பக்கப்பலமாக இருந்தன. ரோம் பெர்லின் டோக்கியோ அச்சு உருவானதுமுலம் ஜப்பான் ,ஹிட்லர் மற்றும் முசோலினிக்கு நண்பனாயிற்று. இந்த உடன்படிக்கை உலக அமைதிக்கு கேடு விளைவித்து .இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்க்கு காரணமாயிற்று .

{ராணுமயமாக்கல் }
முதலாம் உலகப் போருக்குப்பிறகு ஆயுதக் குறைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காததால் புதிய போர் முண்டது பாரிஸ் அமைதிமாநாட்டில் ஜெர்மனியின் படைபலம் குறைக்கப்பட்டது அதே சமயம்.வெற்றிபெற்ற நாடுகளின் படைபலத்தை குறைக்குமாறு ஜெ ர்மனி கேட்டுகொண்டது அதற்கு நேச நாடுகள் உடன்படாமல் போகவே. ஹிட்டலர் தமது ஆட்சிகாலத்தில் ஜெர்மனியின் படைவலிமையப் பெருக்கினார் ஆயுதங்கள் அதிக அளவு உற்பத்தி செய்ப்பட்டதாலும், ராணுவமயமாக்கலாலும் இரண்டாம் உலகப்போர் தவிர்க்க முடியாகிவிட்டது.

இரண்டாம் உலகப் போருக்கு பேரரசுக் கொள்கையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து. பேரரசுக் கொள்கை அதிகம் பெற்றிருந்து. இருநாடுகளும் தங்களது நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துவதையே குறிக்கோளாகசெயல்ப்பட்டன . ரைன்லாந்து , ஆஸ்த்திரியா ,மெமல், செக்கோஸலோவேகியா போன்றபகுதிகளை ஹிட்லர் ஜெர்மனியுடன் இனைத்து கொண்டார் .
முசோலினி தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையே பின்பற்றினர்.