"அரையன் இராசராசன்"

"அரையன் இராசராசன்"

 ஒவ்வொறு அரசர்களும்  பெரும் போர்  வெற்றியில் பெரும் பங்கு உள்ளவர்கள் படைவீரர்களும் படைத்தளபதிகளும் ஆவார்கள்.

சுத்தமான வீரம் ,தன்னலமற்ற நாட்டுப்பற்று , பெரும் துணிவு கொண்ட தளபதிகள் அமைவது அரசன் பெற்ற வரம்.

கங்கையும் கடாரமும் கொண்ட சோழப்பெருவேந்தர் இராஜேந்திரனின் தளபதிகளில் ஒருவர் அரையன் இராசராசன்.

கங்கை படையெடுப்பு ,
சாளுக்கியப்
படையெடுப்பு என்று இராஜேந்திரரின் பெரும் வெற்றிகள் அனைத்திற்கும் தலமையேற்றவர் அரையன் இராசராசன்.

இவரரது வீரம்பற்றி ஒரு கல்வெட்டுச் செய்தி..

சோழர்களின் சாளுக்கிய படையெடுப்பு. 

மிகக்கடுமையான போர்க்களம்.

சாளுக்கிய விஜயாதித்தனை இராஜேந்திரர் தலைமையில் சோழர்படை எதிர்கொண்டது.

இராஜேந்திரர் தனது தளபதி அரையன் இராஜரானை நோக்கி முன்னேறிச் செல் என்று கட்டளையிட...

அரையன் இராஜராஜனும் தனது படைகளுடன் முன்னேறிச் செல்ல.. எதிர்கொண்ட சாளுக்கியர்படை சிதறி ஓடியது.

அரையன் இராசராசர் வருகிறார் என்ற செய்தியை அறிந்தவுடன்... அரையன் இராசராசன் என்ற பெயரைக் கேட்டவுடன் .. சாளுக்கிய வேங்கி அரசர் விஜயாதித்தர் போர்க்களத்தைவிட்டு தப்பி ஓடுகிறார்.

இச்செய்தி சாளுக்கிய தேசத்திலேயே கல்வெட்டாக உள்ளது.

  ஆந்திரா.அனந்தபூர் மாவட்டம். சீவரம் என்னும் ஊரில் உள்ள கோவில் மண்டபம் ஒன்றில் இக்கல்வெட்டுச் செய்தியைக் காணலாம்.

இராஜேந்தினின் 10 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1022.

அரையன் இராசராசன்.
சோழமண்டலத்தில் உள்ள சாத்தமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நால்மடிவீமன், சோழச்சக்கரன், வீரபூஷணம், எதிர்த்தவர் காலன், வீரவீமன் என்ற பட்டங்களையுடைய சோழர்படைத் தளபதி.

இவரது முழுப்பெயர்..

" விக்கிரமச் சோழியவரையனாகிய அரையன் இராசராசன் "

பேரைக்கேட்டவுடன் சும்மா அதிர்துல்ல....

அன்புடன் 
மா.மாரிராஜன்.

(A.R.E.751 / 1917)