தஞ்சை இராஜராஜேச்சரம் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை

அருமொழி இராஜராஜன் இராஜேந்திரன்    

தஞ்சை இராஜராஜேச்சரம் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை ஒவ்வொரு கல்வெட்டிலும் ஒரு வீத உணர்வுகள் இருப்பதை நம்மால் உணரமுடியும்,, கல்வெட்டு செய்திகள் அனைத்திலும் ஓர் பிரம்மாண்டம் காணப்படும், அழகு தமிழில் கோவில் முழுவதும் கல்வெட்டுகள் காண்கிறோம், இந்த கல்வெட்டை கல்லில் வெட்டியவர் யார்? என்ற கேள்வி நம் மனதில் எழும் என்று இராஜராஜர் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் சிந்தித்திருப்பார் போல அதற்கான விடையை நம்மிடம் தந்துள்ளார்.




இக்கல்வெட்டின் தனி சிறப்பு என்னவென்றால் இராஜராஜரின் 29 ஆம் ஆட்சி ஆண்டு மற்றும் இராஜேந்திர சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் திருச்சுற்று மாளிகையில் அமைந்துள்ள உமாபரமேஸ்வரி அம்மனுக்கு வழங்கப்பட்ட கொடைகளை பற்றி செய்திகள் உள்ளன, தந்தையும் மகனும் ஒரே கல்வெட்டில் தோன்றுவது ஓர் தனி சிறப்பு, முக்கியமாக தஞ்சை இராஜராஜேச்சரத்தில்  கல்வெட்டுகளை எழுதியவர் "இரவி பாளூர்”, என்ற தகவலும் கிடைக்கிறது.

கல்வெட்டு செய்தி

இராஜராஜ சோழரின் 29 ஆம் ஆட்சி ஆண்டில் ஸ்ரீகார்யம் செய்யும் ஆற்றூரை சேர்ந்த நக்கன் தோன்றி என்பவர் திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து உமா பரமேச்வரியார்க்கு பொன்னில் ஆன ஓர் மாலையை நிவந்தமாக தருகிறார்.பொன்னின் அளவு இரண்டரைக் கழஞ்சு என்றுள்ளது.

சாத்தன்குடி என்ற ஊரை சேர்ந்த இரவிபாளூர் என்பவர் மூன்று மஞ்சாடி அளவில் ஒரு பொன் எடைக்கொண்ட பட்டைக்காறையை  நிவந்தமாக தந்துள்ளார்.

உடையார் கோயிலில் கல்லில் எழுத்து வெட்டுவிக்கின்ற

அருமொழிதேவ வளநாட்டு வண்டாழை

௨டையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்

வேளூர்க் கூற்றத்து சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளூர்.

ஒரே கல்வெட்டு அதனுள்ளே  எத்தனை செய்திகள் அடங்கியுள்ளன

 இராஜராஜேச்சரம் செல்லும்போது கல்வெட்டினை கண்டுக்களியுங்கள்

அம்மன் சன்னதி பின்பபுறத்தில் திருச்சுற்று  மாளிகையில்  இக் கல்வெட்டு அமைந்துள்ளது.

திரு.வாசுநாதன்
ஓய்வு பெற்ற அதிகாரி,
இந்து அறநிலையத்துறை.