பள்ளர் சமூகம் அளித்த நிலதானம்

பள்ளர் சமூகம் அளித்த நிலதானம் - அறியாத தகவல்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இருவப்புரம் பெரும்படைச் சாத்தான் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிடைக்கப்பட்ட கல்வெட்டு செய்தியானது, இக்கோவிலுக்கு பள்ளர் சமூகத்தவர்கள் அளித்த நிலதானம் பற்றி குறிக்கப்பட்டுள்ளது.




பெரும்படைச் சாத்தான் என்பது மிகவும் பழமையான கோவில். இவை சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் 9ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டும் உள்ளது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த பழமைமிக்க கோவில் இது. 


இந்த கோவிலின் நுழைவாயிலில் கொல்லம் ஆண்டு 1088ம் வருடம் அதாவது கிபி 1913ம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் சுப்ப குடும்பன் மக்கள் இருவர் இக்கோயிலுக்கு 75 குழி நிலம் தானமாக கொடுத்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தானம் வழங்கிய குடும்பர்களின் சிற்பங்கள் கோவில் நுழைவாயிலில் கைகள் கூப்பிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளர் சமூகத்தை குடும்பர் என்கிற பெயரில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சமூக நடைமுறையில் பள்ளர் சமூகத்தை குடும்பர் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இக்கல்வெட்டு பள்ளர் சமூகம் நிலதானம் செய்ததற்கு மிகப்பெரிய சான்று. 




பொதுவாக பள்ளர் சமூகத்தவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் தலித் என்று சொல்லி வந்த நிலையில் 1913ம் ஆண்டு இவர்களில்
சிலர் கோவிலுக்கு கொடை அளிக்கும் அளவிற்கு பொருளாதார வசதி படைத்தவர்களாக இருந்துள்ளதை இருவப்பபுரம் கல்வெட்டு நிறுபித்துள்ளது.