அத்திவெட்டி ஜமீன்!

அத்திவெட்டி ஜமீன்தாரைக் குறிப்பிடும் திருமக்கோட்டைச் செப்பேடு!

செப்பேட்டின் பெயர் - திருமக்கோட்டைச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - திருமக்கோட்டை
ஊர் - திருமக்கோட்டை
வட்டம் - மன்னார்குடி
மாவட்டம் - தஞ்சாவூர்
மொழியும் எழுத்தும் - தமிழ்-தமிழ்
அரசு / ஆட்சியாளர் - தஞ்சை மராட்டியர் / சரபோசி
வரலாற்று ஆண்டு - கி.பி.1549
விளக்கம் - 
          சரபோசி மன்னர் ஆட்சிக் காலத்தில் பட்டுக்கோட்டைச் சுபாவைச் சேர்ந்த மதுக்கூர்ச் சீமையில் பெரியகோட்டை மாகாணத்தில் கானு சாயபு, சிங்கராச பண்டிதர் ஆகியோர் நிருவாகம் செய்யும்போது அப்பகுதியில் உகந்தாச்சியாபிள்ளை என்பவர் அபாலுதாராக இருந்தார். அப்பெரியகோட்டை மாகாணத்துக்கு உட்பட்ட ஆவிக்கோட்டை, கழிச்சாங்கோட்டை, உலையக்கொன்றம், கணியாகுறிச்சி, சொக்கநாதநல்லூர் ஆகிய ஐந்து ஊர்களின் குடியானவர்கள், ஊர் நன்செய் புன்செய் விளைவில் கலத்துக்கு நாழி நெல் மெய்குநாத சுவாமிக்கு அளிப்பதாக எழுதித் தந்துள்ளனர்.இதை செய்யும் படி சொன்னதாக அவர்கள் "ஆகாசம் சேர்வைக்காரர் குமாரன் உடையப்பன் சேர்வைக்காரரை குறிப்பிடுகின்றனர்.  ஆகாசன்சேர்வைக்காரர் என்பார் அத்திவெட்டி மறவர் பாளையக்காரர் ஆவார். 

அத்திவெட்டி ஜமீன்! 

ஆகாசம் துரைசாமி சேர்வைக்காரர் எனும் அத்திவெட்டி பாளையக்காரரின் தற்போதைய வாரிசு. ..ஆகாசம் முத்துவயிரவ பழனியப்பன் சேர்வைக்காரர் தமது ஜமீன் வரலாற்றை அவரின் வாய்வழித்தகவலாகக்கூறிய செய்திகள் இவை. தஞ்சையில் இருந்த மூன்று மறவர் ஜமீன்களில் ஒன்று அத்திவெட்டி ஜமீனாகும். மற்ற இரு பாளையங்கள் சேந்தன்குடியும்-கோனூரும். இவர்களின் மூதாதையர் திருவாடனை பகுதியில் கீறமங்கலம் அருகில் இருந்து வந்ததாகவும். அவர்கள் சுல்தானின் காலத்தில் சிதறிய பாண்டியர் வமிசத்தவருள் ஒருவராக இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள். இவர்கள் வந்த பொழுது இப்பகுதியில் இருந்த மன்னர் ஒருவர் அவர்களை ஆதரித்து வந்துள்ளார். வானத்தில் நிலையில்லாமல் திரியும் ஒருவகைக்குருவியைத்தமது வளரியால் ஒரே வெட்டில் வீழ்த்தி அக்குருவியை மன்னரின் மடியிலேயே விழச்செய்தாரம் இதனால் மன்னர் மகிழ்ந்து அவருக்கு "ஆகாசம்" என்ற பட்டமளித்துவேதாரண்யம் வரையிலான பகுதிகளை ஆளக்கொடுத்து பாளையம் அளித்தாராம். இன்றும் வேதாரண்யம் கோயிலில் முதல் மண்டகப்படி இவர்களுக்குத்தான் உள்ளது.இவர்கள் அஞ்சு கோட்டை மறவர் பிரிவினர் எனவும் இவர்களின் தாலியில் அஞ்சு கொத்துகள் உடையது எனவும் இன்றும் எவராவது இறந்தால் நெஞ்சில் தழும்பு உண்டாக்கியே எரிப்பதையும் புதைப்பதையும் செய்கிறார்கள் என கூடுதல் தகவலையும் தருகிறார். இதுபோக இவர்கள் காமாட்சி அம்மன் மற்றும் கீறமங்கலத்தில் உள்ள கருப்பண்ண ஸ்வாமி கோயிலையும் குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள்.  இடிந்து பட்ட அரண்மனையில் வாழாமல் இடித்து தள்ளிவிட்டு தற்போது புதிதாக கட்டிய வீட்டில் வாழ்கிறார்கள். இவர்களின் வரலாறு தீவிரமாக ஆராயப்படவேண்டும் என்பதே நமது விருப்பம்.

          மேற்கண்ட ஊர்களுக்கு முறையே, நல்லவநாடன், கலிக்கநாடன், கஞ்சமலைத் தேவர், சிதம்பரத் தேவர், குண்ணப்பதேவர், வாலாமுத்து தேவர், நல்லகுட்டித் தேவர், ஆதியப்ப தேவர், திருமலைக் கொழுந்தா பிள்ளை, குப்பத் தேவர், லெட்சுமணத் தேவர், அய்யா முதலியார் ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர்.
                                 - சுபம்-

அன்பன்:

கி.ச. முனிராஜ் வாணாதிராயன்