சிவகிரி ஜமீன்

மேற்குத் தொடர்ச்சி மலை சரிவில் அமர்ந்திருக்கிறது சிவகிரி ஜமீன்.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து விழும் அருவிநீர் வீணாகிவிடக்கூடாது என்று மலையில் அணையை கட்டினர் சிவகிரி ஜமீன்தார். 

காட்டை அழித்து விளைநிலங்களை உருவாக்கினர். இதனால் செல்வச் செழிப்பு மிகுந்த ஜமீனாக சிவகிரி உயர்ந்தது...

மேற்குத் தொடர்ச்சி மலையில் செண்பகவல்லி என்ற பெயரில் அணைக்கட்டு ஒன்றை இவர் கட்டியுள்ளார். திருவாங்கூர் மகாராஜாவோடு இணைந்து இப்பணியை இவர் மேற்கொண்டிருக்கிறார்.

ஆனால், 1972ல் இந்த அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விட்டது. அது இன்றுவரைசீரமைக்கபடாதது வேதனையான தகவல்!

சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்டவை நான்கு கோயில்கள். 
1. கூடுபாறை பாலசுப்பிரமணியர் கோயில்,
2. தென்மலை ஸ்ரீதிரிபுராந்தக ஈஸ்வரன் கோயில்,
3. வடக்குச் சத்திரம் ராமநாதசுவாமி கோயில்,
4. சிவகிரி திருநீலகண்ட சுவாமிகள் கோயில்.

சிவகிரி ஜமீன்தார் சங்கிலி வீரபாண்டிய சின்ன தம்பியார் 1854 - 1896 காலங்களில் நிறுவப்பட்ட சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணியர் கோயிலுக்கும் அதனைச் சார்ந்த கருணை ஆனந்த சித்தர் சுவாமி களின் ஜீவசமாதிக்கும் அவருடைய வாரிசுகள் பரம்பரை பரம்பரையாக தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார்கள். தற்போது இளைய ஜமீன்தார் வி.எஸ்.வி சேவுகப்பாண்டியன் (எ) விக்னேஷ்வர  சின்னத் தம்பியார் தர்மகர்த்தாவாகவும், காப்பாளராக வி.எஸ். வரகுணராம பாண்டிய சின்னத் தம்பியார் மனைவி பாலகுமார் நாச்சியார் அவர்களும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.....

1783ம் ஆண்டு வீரம்மாள் நாச்சியார் என்ற ஜமீன்தாரிணி வெள்ளைக்காரர்களை எதிர்த்து கொரில்லா தாக்குதல் நடத்தியிருக்கிறார்..... ஆங்கிலேயர்களிடமிருந்து வெடி மருந்து மற்றும் குண்டுகளைப் பறித்துள்ளார். திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்றவர்களோடு நல்ல நட்பு வைத்திருந்தார். இதுபோன்ற சம்பவங்கள் சிவகிரி ஜமீன்தார் வரலாற்றில் காணப்படுகிறது. நாச்சியாரின் சிலை தற்போது பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலின் தெப்பக்குளம் அருகில் கருணை ஆனந்த சித்தர் பீடத்துக்கு எதிரே அமைந்துள்ளது...