பல்லவ இளவரசன் காசியப்பனின் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த புனிதமான இடம்.

பல்லவ இளவரசன் காசியப்பனின் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த புனிதமான இடம்.

கொழும்பில் இருந்து திருகோணமலைக்குச் செல்லும் வழியில் ஹபரன எனும் முக்கிய சந்தி அமைந்துள்ளது. இங்கிருந்து கிழக்குப் பக்க வீதி மட்டக்களப்புக்கும், மேற்குப் பக்க வீதி அனுராதபுரத்திற்கும் பிரித்து செல்கிறது. 

சாதாரணமாக நாம் கடந்து செல்லும் இவ்விடம் சுமார் 1500 வருட பாரம்பரியத்தைக் கொண்ட இடம் என்பது பலருக்கு தெரியாத விடயமாகும்.

சிகிரியா எனும் சிம்மகிரி மலைக்கோட்டையை ஆட்சி செய்த காசியப்ப மன்னன் இறந்த பின் அவனது மனைவி சிம்மகிரியின் வடக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் சிலகாலம் ஒளிந்திருந்து இரகசியமாக வாழ்ந்து வந்தாள். தனது கணவன் இறக்கும் தருவாயில் அணிந்திருந்த ஆபரணங்களை இங்குள்ள குகையில் வைத்து வழிபட்டு வந்தாள்.

இதனால் இம்மலை ஆபரண மலை (ஆபரண கல) என அழைக்கப்பட்டது. ஹபரன சந்தியின் மேற்கில் ஹபரன குளத்தின் அருகில் இம்மலை அமைந்துள்ளது.

ஆபரண மலை என்பதே ஆபரண கல, ஆபரண எனத் திரிபடைந்து பிற்காலத்தில் மருவி ஹபரண எனப் பெயர் பெற்றதாக இப்பகுதியில் உள்ள மக்கள் கர்ண பரம்பரையாகக் கூறி வருகின்றனர்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.