சோழர் காலத்தில்தான் சாதிய படிநிலைகள் இருந்தது என்று ஒரு கற்பிதம் !?

" சூத்திர சொழ தெரிஞ்ச கைக்கோளர்."

சோழர் காலத்தில்தான் சாதிய படிநிலைகள் இருந்தது என்று ஒரு கற்பிதம் வலிந்து திணிக்கப்படுகிறது.

சோழர் காலத்தில் சாதியப்பிரிவுகள் இருந்தன..  இவைகள் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. பிறப்பின் அடிப்படையில் அமையவில்லை.

நால்வர்ணம் என்று சொல்லப்படும் சாதி படிநிலைகள் நிச்சயமாக சோழர்காலத்திலோ..
பாண்டியர் காலத்திலோ இல்லை..

சான்றுகள் ஏராளமாக உள்ளன.. அவற்றில் ஒன்று இக்கல்வெட்டு..

வளநாடு என்று சொல்லப்படும் ஊர்பிரிவுகள் அனைத்தும் அரச குடும்பத்தார் பெயராலேயே அழைக்கப்படும்.
அருமொழிதேவவ வளநாடு..விக்ரமச்சோழ வளநாடு....

அதே போல் படைப்பிரிவுகள் கைக்கோளர் படை என்றழைக்கப்படும்.
படைப்பிரிவுகள்  அனைத்திற்கும் அரசன் மற்றும் இளவரசன் பெயரே சூட்டப்படும்..
அருமொழி தேவர் தெரிஞ்ச கைக்கோளர்படை, கரிகால்சோழ கைக்கோளர் படை....

கருர் அருகே உள்ள சோமனூர் சிவன் கோவில் கல்வெட்டு..
இராஜராஜதேவர் கல்வெட்டு.. இராஜராஜரின் படைப்பிரிவுகளின் பெயர்கள்...

1. ஸ்ரீராஜராஜதேவர் கைக்கோளப்படை.
2.பிராந்தக தெரிஞ்ச கைக்கோளர்.
3.சூத்திர சோழ கைக்கோளர்.
4. பாண்டிய குலாசினி கைக்கோளர்.

அதாவது சத்திரியசிகாமணி என்ற பெயர் கொண்ட ராஜராஜனுக்கு சூத்திரசோழன் என்ற பெயரும் இருக்கிறது.

இராஜராஜத்தேவர் என்றும் அருமொழி வர்மர் என்றும் பெயர் கொண்ட இராஜராஜன்..

பிராமணரான சோழர் படைத்தளபதி ஒருவரின் பெயர் சேநாதிபதி மும்முடிச்சோழ கிருஷ்ணன் பிரம்மராயன்.

ஸ்ரீகார்யம் பணிபுரிந்த வேளாளன் ஒருவருக்கு ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்னும் பெயர்.

பெருந்தரம் என்னும் பதவியிலிருந்த கேராளந்தக விழுப்பறையன்..

பெருந்தனம் பதவியில் இருந்த இராஜராஜ கத்திரையன்..

திருவாய்க் கேள்வி அதிகாரியாக இருந்த இராசகேசரி கோதண்டராமனான கடிகை மராயன்.

வடதிசை படைத்தலைவன் பரமன் மழபாடியனான் மும்முடிச்சோழன்.

படைத்தலைவராகவும் நில அளவையாளராகவும் இருந்த சேனாதிபதி குரவன் உலகளந்த இராசராச மராயன்.

ஒரு தச்சனின் பெயர் இராஜராஜ பெருந்தச்சன்.

 நாவிதர் ஒருவரின் பெயர்  இராஜராஜ
பெருநாவிதன்.

டெய்லர் ஒருவரது பெயர்.  கேராளந்தக பெருந்தையான் .

கன்னார் ஒருவருக்கு சத்திரியசிகாமணி பெருங்கன்னான் என்று பெயர்.

தட்டான் ஒருவனுக்கு ராஜராஜத்தேவர் சிறுதனத்து தட்டான் கூத்தன் கணவதியான் என்று பெயர்.

சுருக்கமாகச் சொன்னால்.. இராஜராஜன் காலத்தில் இருந்த அத்தனை சமூகமும் அரசனது பெயரைக் கொண்டு சிறப்புற்றனர்... அனைத்துப் பதவிகளிலும் அனைவரும் இருந்தனர்..

முடிவாக....

சூத்திரன்..என்பது தற்காலத்தில் பொருள் என்னவோ....

சோழர் காலத்தில் ..
இராஜராஜனுக்கு அப்பெயர் இருந்தது..

அன்புடன்..
மா.மாரிராஜன்.

Refrence ..
S.i.i. vol 4..no 391.