புதுச்சேரியில் உள்ள உப்பளம் மைதானத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசியபோது "மத்திய அரசுக்கு தான் தமிழ்நாடு தனி மாநிலம் புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று இருப்பார்கள். ஆனால் நாம் வேறு வேறு கிடையாது நாம் ஒன்றுதான் என தெரிவித்தார். மேலும் எல்லாரும் சொந்தம்தான் நாம் பார்க்கும் போது போது பாச உணர்வு அது மட்டும் இருந்தால் போதும். உலகில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விஜய் பாரதியார் இருந்த மண் பாரதிதாசன் பிறந்த மண் புதுச்சேரி என தெரிவித்தார். மேலும் தமிழக அரசு புதுச்சேரி அரசு கிடையாது, நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர் என தெரிவித்தார். இதற்காக புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விஜய் இதைப் பார்த்து முதலமைச்சர் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வரும் தேர்தலில் 100% கற்றுக் கொள்வார்கள் அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பேசினார்.
பின்னர் புதுச்சேரி கடலூர் மார்க்கத்தில் ரயில் திட்டம் வேண்டும் என பேசிய விஜய் புதுச்சேரி மக்களிடம் சொல்கிறேன். திமுகவை நம்பாதிங்க நம்ப வைத்து ஏமாற்றுவார்கள். மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி இடம்பெறவில்லை. அதனால் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரியில் மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது தொழில் வளர்ச்சியும் வேண்டும் என தெரிவித்தார்.