நியாய விலைக் கடை இயங்கும் நேரத்தில் மாற்றம்!

08 June 2021

தமிழகத்தில் இன்று முதல் ரேசன் கடைகளின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் கொரொனா அலைப்பரவல் சற்றுக் குறையத் தொடங்கியுள்ளது, எனவே வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இன்று முதல் நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல் 12:30 மணி வரையிலு, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலை அறிந்து பிரதமர் மோடி வரும், தீபாவளி வரை வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு ரேசனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.