*திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் பழுதாகி* *உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்*

12 July 2021

*திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் பழுதாகி*
*உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்*
________________

திருவாரூர்,ஜூலை-12

திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் பழுதாகி ஆபத்தான நிலையில் உயிர்பலி வாங்க காத்திருக்கும்  மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் அருகே சேந்தமங்கலம் நேரு நகர் பகுதியில் கிராம நிர்வாகம் அலுவலகம், ரேஷன் கடை,  நூலகம் ஆகியவை இயங்கி வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மிகவும் பலவீனமான இந்த மின்கம்பம், எந்த நேரத்திலும் கிழே விழும் அபாய  நிலையில்  உள்ளது என  கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

    கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்கிறது. அதிவேக காற்றும் வீசுவதால், அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும்,   ஆகவே உயிர்சேதம் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நட வேண்டும் எனவும்  அப்பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா?

*நிருபர் மீனா திருவாரூர்*