உருவாகும் புதிய புயல்.. கனமழை எச்சரிக்கை
24 October 2025
விழுப்புரம்: உருவாகும் புதிய புயல்.. கனமழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் ஆகிய இன்று (அக்.24) மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இந்த தாழ்வுப்பகுதி அக்டோபர் 27 ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மொத்த புயல் என்று பெயரிட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்