பத்து வருடங்களாக சாலை வசதி இன்றி தனித் தீவு போல் வாழும் கிராமம்

31 October 2025

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி பச்சமலையங்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது புதுக்காமன்பட்டி கிராமம் இந்த கிராமத்தில் 200 மேல் குடும்பம்கள் வசித்து வருகின்றனர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சாலை சரிசெய்யப்படாமல் தனித்தீவு போல் அந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இது பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்க்கும் பொழுது தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற ஒரு வாரத்திலேயே சாலை சரி செய்து தரப்படும் என்று கூறுகிறார்கள் ஆனால் வெற்றி பெற்ற பிறகு இந்த பகுதிக்கே வருவதில்லை என்றும் பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்தனர். 


நிருபர். த. பிரபாகரன்
திண்டுக்கல்.