இன்னும் வலுவாக செயலாற்றுவோம்-ராகுல் காந்தி

14 November 2025

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் பீகார் முடிவு உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. மேலும் தொடக்கத்தில் இருந்து நியாயமற்ற முறையில் தேர்தல் நடந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான யுத்தம். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க இன்னும் வலுவாக செயலாற்றுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..