பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டி ஆர்ப்பாட்டம்

11 June 2021


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக வந்தவாசி நகர பொறுப்பாளர் எம்.வேலாயுதம் தலைமையில் மாவட்ட ஊடகத்துறை தலைவர் வந்தை டாக்டர் எம். பிரேம்குமார் முன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் வேம்பு செல்வம் மற்றும் மாரி, ஜெயசீலன், குணசேகரன், மண்ணு ஆகியோர் கொரோனா இடைவெளியை பின்பற்றி மத்திய அரசினை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.