பிரபல நடிகர் அமெரிக்க அதிபராக வேண்டும்… மக்கள் விரும்பம் !

20 June 2021

முன்னாள் குத்துச் சண்டை வீரரும் , ஹாலிவுட் நடிகருமான ட்வைனி ஜான்சன் அதிபராக வேண்டுமென்று அமெரிக்க மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் இன்றைய தேதியில் அங்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளவர் மார்க் ட்வைனி.

இவரது ஒவ்வொரு படங்களும் சிறியோர் முதல் பெரியோர் வரை பலராலும் ரசித்துப் பார்க்கப்படுகிறது. அதனால் வசூல் குவிகிறது. இவருக்கு ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனைப் போன்று ட்வைனி ஜான்சனும் அமெரிக்க அதிபர் ஆக வேண்டுமென அமெரிக்காவில் உள்ள 46% மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் கலிபோர்னியா மேயராகத் தேர்வாகி அரசியலில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.