பயணிகள் நிழற்குடை இல்லாமல் பயணிகள் தவிப்பு

07 July 2021

கும்பகோணம் நகரத்தில் தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கும்பேஸ்வரர் கோவில் A.R.R.வளைவு பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் பயணிகள் நிழல்குடை இல்லாமல் பயணிகள் வெப்பத்தில் தவித்து வருகின்றனர்.

இப்பேருந்து நிறுத்தக்கூடிய இடத்தில், நகரம் எல்லை மற்றும் வெளியூர் பயணிகளும் வழிபாட்டுத்தலங்களுக்கு வரும் பக்தர்களும் இப்பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விரைவில் அங்கு பேருந்து திருத்த நிழற்குடை அமைத்துக் கொடுக்க வேண்டுமென  பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

செய்தியாளர் 
கோ வளங்கோவன் கும்பகோணம்