அக்.1 உலக சைவ உணவு உண்போர் தினம்..

01 October 2020

அக்டோபர் 1 ஆம் தேதி உலக சைவ உணவு சாப்பிடுவோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இன்று உலகம் முழுவதும் சைவ உணவு சாப்பிடுவோர் தினம் கொண்டாட அமெரிக்காதான் காரணம் தெரியுமா? ஆம் 1977-ஆம் ஆண்டு வட அமெரிக்க சைவ சங்கம்தான் உலக சைவ உணவு சாப்பிடுவோர் தினத்தை நிறுவியது. பின் 1978-இல் உலக சைவ சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு அக்டோபர் 1-ஆம் தேதியும் உலக சைவ உணவு சாப்பிடுவோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று அவர்களைப் பற்றி பேச வேண்டிய நாள் என்பதால் சைவம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

இதய ஆரோக்கியம்: இறைச்சி உணவுகள் கொழுப்பு நிறைந்தவை என்பதால் அவை இதயத்திற்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக மாரடைப்பை உண்டாக்கும் என ஆய்வு உண்மை. அந்த வகையில் காய்கறி, பழங்கள், கீரை வகைகள் என சாப்பிட்டுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்ல உணவுகளாகும். இது மருத்துவ கூற்றே அன்றி ஆய்வுகள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. 

நோய் எதிர்ப்பு சக்தி: சைவ உணவுகளில் பொதுவாக வைட்டமின் சி மற்றும் டி, ஸிங்க், மினரல்கள் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. 

புற்றுநோய்: சைவ உணவு சாப்பிடுவோருக்கு புற்றுநோய் உண்டாகும் ஆபத்து குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டைப் 2 நீரிழிவுக்கு நல்லது : தாவர வகை சார்ந்த உணவுகளை சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். எனவே காய்கறிகள், பழங்கள் அதோடு நட்ஸ், விதைகள் சாப்பிடுவது நல்லது.
 
விட்டமின் குறைபாடுகள் : உடலில் போதுமான விட்டமின் சத்து இல்லை எனில் உடல் சோர்வு அதைத் தொடர்ந்து உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். ஆனால் காய்கறி ,பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் நிறைவாக இருப்பதால் இந்த குறைபாடுகளை தவிர்க்கலாம். 

புரதச்சத்து : உடலின் ஆற்றலுக்கு புரதச்சத்து மிக அவசியமான ஒன்று. எலும்பு மற்றும் தசைகளின் வலுவுக்கு புரதச்சத்து அவசியம். ஆனால் அவை சைவ உணவுகளில் சற்று குறைவுதான். 

சப்ளிமெண்ட் : என்னதான் சைவ உணவுகளில் ஆரோக்கியங்கள் இருந்தாலும் சில ஊட்டச்சத்து குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இதை தவிர்க்க சிலர் சப்ளிமெண்டுகளை எடுத்துக்கொள்ளும் அவசியம் உண்டாகிறது