பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற முடிவடைந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சர் ஆன நிதீஷ் குமார் இன்று தனது வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் பீகார் சட்டசபை தேர்தலில் எங்கள் அரசின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையை வைத்து அதை வெளிப்படுத்தி இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன் என்றும் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நித்திஷ் குமார் தெரிவித்துள்ளார்...