ஊழல் அற்ற பணியில் ஈடுபடுவேன் அதிகார வரத்திற்கு துணை போகமாட்டேன் என்று கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றனர்

27 October 2025

ஊழல் அற்ற பணியில் ஈடுபடுவேன் அதிகார வரத்திற்கு துணை போகமாட்டேன்  என்று கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றனர் 
கடலூர் மாவட்டத்தில் காவல் அலுவலகத்தில்  காவல் கண்காணிப்பாளர்
 S. ஜெயக்குமார் IPS  தலைமையில் நமது நாட்டின் பொருளாதாரம். அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்தும் செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும். தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் உறுதிமொழிஏற்றனர்.