தமிழகத்தில் ஜுன் 21 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.

11 June 2021

தமிழகத்தில் ஜுன் 21 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு. நோய்த்தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக்கடைகளை திறக்க அரசு அனுமதி .

கடைகளை நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் கட்டாயமாக வைப்பதோடு உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் கட்டாய முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்க கூடாது

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்

இந்த ஊர் அடங்கிப் போவது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். நோய்தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். மேற்காணும் 11 மாவட்டங்களில் கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடு களுக்கும் மட்டும் கட்டுப்பாடுகளுடன் 14 6 2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை இ- பதிவுடன் அனுமதிக்கப்படும்.

மின் பணியாளர்கள், நீ மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்வோர் சேவை கூறுவோர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மணி முதல் 5 மணி வரை இ- பதிவுடன் அனுமதிக்கப்படுவர். எனினும் கடைகள் திறக்க அனுமதி இல்லை. 

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதி.

வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டாக்சி ஓட்டுநர் தவிர மூன்று பையன்களும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மற்றும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். 

வேளாண் உபகரணங்கள், பம்புசெட்டு பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் அனுமதி.

கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் 2 மணிவரை செயல்பட அனுமதி.

மண்டபம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், 25% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும். 

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் தவிர இதர 27 மாவட்டங்களில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. 

அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் விளையாட்டு திடலில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

வேளாண் உபகரணங்கள்,0பம்புசெட்டு பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.

கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை அனுமதிக்கப்படும்.

மண்டபம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருள்களின் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதி.

செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுமான பொருட்கள், விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதி.

மிக்ஸி, கிரைண்டர், டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும்.

தற்போது இதர தொழில் சாலைகளும் 33 சதவீத பணியாளர்களுடன் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி செயல்படும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்குச் செல்ல ஏற்கனவே அனுமதி. தற்போது இ - பதிவு உடன் அவர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் அடையாள அட்டையுடன் பணிக்குச் சென்று வர அனுமதி.

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்கள் அல்லது பத்து நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதி. 

வீட்டுவசதி, நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீடு நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. 

மேலும் பொதுமக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.